யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (யுஎஃப்பியு), ஜன,. 30, 31 ஆகிய தேதிகளில் வங்கிகளை 2 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2 நாட்கள் வேலை நிறுத்தத்தின்போது வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம் என பாரத ஸ்டேட் வங்கி (SBI) தன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. சென்ற ஜன,.24ஆம் தேதி SBI வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) எங்களுக்கு சில செய்திகளை வழங்கி உள்ளது.

ஐக்கிய வங்கி யூனியன்கள் (யுஎஃப்பியு) வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கி இருக்கிறது. UFBU viz. AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF மற்றும் INBOC போன்ற யுஎஃப்பியு-ன் தொகுதி ஒன்றியங்கள் தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஜன,.30 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. ஆகவே SBIல் கணக்கு வைத்திருந்தால், ஜன,.30ம் தேதிக்குள் வங்கி தொடர்பான பணிகளைச் செய்யவேண்டும். ஏனென்றால் இந்த தேதிகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.