50 வருடங்களுக்குப் பிறகு இன்று பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகே வால் நட்சத்திரம் வருகின்றது. இன்று மாலை சூரிய மறைவிற்குப் பிறகு அடி வானத்தின் வடக்கு திசையில் வால் நட்சத்திரம் தென்படத் தொடங்கும். இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பூமிக்கு மிக அருகில் வரும். இதை காண்பதற்கு கொடைக்கானலில் வான இயற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

‘C/2022 E3’ என்ற பெயரில் அறியப்படுகிறது இந்த வால் நட்சத்திரம். பூமிக்கும் சூரியனுக்கும் அருகில் வரும் இந்த வால் நட்சத்திரத்தை இன்று  தொலைநோக்கிகள் மூலமும், பைனாகுலர் மூலமும் பார்க்கலாம். இந்த வால் நட்சத்திரத்தை இரவில் வானத்தில் பார்ப்பது கடினமானது. ஆனால் நமது சூரிய குடும்பத்தின் வழியாக நகரும்போது அதன் பிரகாசத்தை நம்மால் பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்திருக்கிறது.