EPFO உறுப்பினர்கள் தங்களது சொந்த திருமணம், மகள், மகன், சகோதரி (அ) சகோதரரின் திருமணத்துக்காக EPF கணக்கிலிருந்து 50% வரை பணம் எடுக்கலாம். எனினும் திருமணத்துக்காக பணத்தை எடுக்க விரும்பும் ஊழியர் ஒருவர் EPF-க்கு 7 வருடங்கள் பங்களிப்பை முடித்திருக்கவும்.

திருமணத்துக்கு pf பணம் எடுப்பதற்குரிய வழிமுறைகள் என்னென்ன?

உமாங் செயலி வாயிலாக பணத்தை எளிய முறையில் எடுக்கலாம். உங்களது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உமாங் செயலியில் பதிவிறக்கம் செய்து பதிவுசெய்ய வேண்டும். செயலியில் கிடைக்கும் பல்வேறு விருப்பங்களிலிருந்து EPFO விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். ரைஸ் க்ளைம் விருப்பத்தை தேர்ந்தெடுத்து உங்களது UAN எண்ணை நிரப்ப வேண்டும்.

உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ EPFO-ல் உள்ளிட வேண்டும். உங்களது PF கணக்கில் இருந்து பணமெடுக்கும் வகையை தேர்ந்தெடுத்து படிவத்தை நிரப்ப வேண்டும். படிவத்தை சமர்ப்பித்து திரும்பபெறும் கோரிக்கைக்குரிய ஆதார் எண்ணை பெற வேண்டும். வழங்கப்பட்ட குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி திரும்ப பெறும் கோரிக்கையை கண்காணிக்க வேண்டும். EPFO உங்களது கணக்கிற்கு 3 -5 நாட்களுக்குள் பணத்தை மாற்றும்.