10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் கார்டில் சில முக்கிய அப்டேட்டுகளை செய்ய வேண்டியது அவசியம். ஆதார் கார்டில் போட்டோவை மாற்ற வேண்டுமெனில் அதற்கு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதன் வாயிலாக ஆதார் கார்டிலுள்ள உங்களது போட்டோவை மாற்ற முடியும். UIDAI-ன் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான uidai.gov.in-ஐ பார்வையிடவும் (அ) https://uidai.gov.in/ என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் அப்டேட் ஆதார் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

தற்போது ஆதார் பதிவு படிவத்தை டவுன்லோடு செய்து தேவையான விவரங்களை நிரப்பவும். அதன்பின் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்துக்கு சென்று படிவத்தை சமர்ப்பிக்கவும். அங்கிருக்கும் ஆதார் ஊழியர் அனைத்து விபரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு வாயிலாக சரிபார்ப்பார். உங்களது ஆதார் கார்டில் அப்டேட் செய்யப்படும் புது புகைப்படத்தை ஊழியர் கிளிக் செய்வார். இச்சேவைக்கு நீங்கள் ரூ.100 மற்றும் GST கட்டணம் சேர்த்து செலுத்தவேண்டும்.

பின் ஆதார் ஊழியர் அக்னாலெட்ஜ் மென்ட் சீட்டு மற்றும் அப்டேட் ரிக்வஸ்ட் எண்ணை வழங்குவார். செயல்முறைகள் முடிந்தவுடன் உங்களது போட்டோ 90 நாட்களுக்குள் அப்டேட் செய்யப்படும். மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடித்து நீங்கள் புகைப்படத்தை அப்டேட் செய்யும் செயல்முறையை முடித்தபின், உங்களது விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனிலும் கண்காணித்துக்கொள்ளலாம்.