தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்காக முன்னதாகவே தேவஸ்தானத்தின் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் இயங்கி வந்த 41 போலி இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டு அவைகளை முடக்க வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளமான tirupatibalaji.ap.gov.in முகவரியை சிலர் சிறிய மாற்றங்கள் செய்து tirupatibalaji-ap-gov.org என்ற இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்வது அம்பலமாகியுள்ளது. மேலும், போலி இணையதளங்களை நம்ப வேண்டாம் என பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது