தற்போது சோஷியல் மீடியாவில் திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், மணமக்கள் மாலை மாற்றும் சடங்குக்காக காத்திருப்பதை பார்க்க முடிகிறது. அதன்படி மணமகள் தன் முன் நிற்கக்கூடிய மணமகனின் கழுத்தில் மாலை போட்டுவிட்டார். அப்போது அவரது தோழியும் அருகே நிற்கிறார். இதையடுத்து மணமகன் மாலையை எடுத்து அதை மணமகளின் கழுத்தில் போடுவதற்கு பதில் அவரது தோழியின் கழுத்தில் போட்டு விடுகிறார்.

மாப்பிள்ளையின் இச்செயலை கண்டு சுற்றி நின்றவர்கள் அதிர்ந்து போனார்கள். கையில் தட்டுடன் நின்று கொண்டுருந்த மணமகளின் தோழிக்கும் என்ன நடந்தது என புரியவில்லை. இதனிடையே மணமகளோ அதிர்ச்சியில் உறைந்ததோடு தன் தோழியின் கழுத்தில் மாலை இட்டதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.