பாம்புகள் குறித்த வீடியோ பார்பவர்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். தற்போது ஒரு ராஜநாகம் குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ராஜநாகம் சுமார் 15 அடி நீளம் இருப்பது போன்று தெரிகிறது.

வீடியோவை பார்க்கும்போது 15 அடி நீளமுள்ள இந்த பாம்பு காருக்கு அடியில் மறைந்து இருப்பதை காணலாம். அதை கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழலில், பாம்பை பிடிக்கும் பயிற்சி பெற்ற ஆடவர் ஒருவர் எந்த ஒரு பதற்றமும் இன்றி நிதானமாக பாம்பை ஒரு பைக்குள் அடைத்தார். அந்த பாம்பு பிறகு காட்டில் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.