டைரக்டர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் “தீராக் காதல்” படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா போன்றோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைக்கிறார். ரவி வர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் தீராக் காதல் படத்தின் டிரைலர் சமூகவலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் இளைஞனின் கதையை வெளிப்படுத்துவது போல் உருவாகி இருக்கும் இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வரும் 26-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.