தரணி ராசேந்திரன் டைரக்டில் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் உருவாகிய படம் “யாத்திசை”. இதில் சக்தி மித்ரன், செயோன், ராஜ லட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உட்பட பலர் நடித்து உள்ளனர். ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கு எதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதையாக “யாத்திசை” படம் உருவாகி கடந்த ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இந்த படம் தொடர்பாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் யாத்திசை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் இப்படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து உள்ளது.