திகார் மத்திய சிறைச்சாலையை 2023ம் வருடத்தில் கைப்பேசியே இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயித்து இருப்பதாக சிறைத்துறை டிஜிபி தெரிவித்து உள்ளார். 2023ம் வருடம் திகார் சிறைச்சாலையில் 23 மாற்றங்களை ஏற்படுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் இலக்காக ஒட்டுமொத்த சிறைச்சாலையையும் செல்லிடப்பேசி இல்லாத பகுதியாக மாற்றவும், பிரச்னைகள் குறித்து கைதிகள் தகவலளிக்கும் அமைப்பை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிறைத்துறை டிஜிபி பேசியதாவது, திகார் சிறையில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து திடீர் சோதனைகள் நடத்தி பெரும்பாலன கைப்பேசிகளையும், தடைசெய்யப்பட்ட பல்வேறு பொருள்களையும் கைப்பற்றி இருக்கிறோம். பெரும்பாலான சோதனைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 348 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.