அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு வர்த்தகத்திற்கு நியூயார்கள் பங்குச் சந்தையின் குறியீட்டெண்ணான டோ ஜோன்ஸ் தடைவிதித்துள்ளது. இதையடுத்து அதானி குழுமத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதானி குழுமத்தின் மீது ஹிண்டன் பா்க் ஆய்வு நிறுவனமானது மோசடி குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து, அக்குழுமத்தின் பங்குகள் பெரும் அளவில் சரிவடைந்துள்ளது. இதற்கிடையில் ரூ.20,000 கோடிக்கு 2ம் நிலை பங்குவெளியீடு நடவடிக்கைகளை அதானி குழுமமானது மேற்கொண்டது. பங்குகளை வாங்க முதலீட்டாளா்கள் உரிய தொகையை வழங்கி இருந்த நிலையில், பங்கு வெளியீட்டு நடவடிக்கைகளை திரும்ப பெற அதானி குழுமம் அறிவித்தது.

அதோடு முதலீட்டாளா்கள் செலுத்திய தொகை திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதானி குழுமத்தின் நிதி ஸ்திரத்தன்மை நிலை இல்லாமல் இருப்பதால் அக்குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு வங்கிகளிடம் ஆா்பிஐ கோரி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிக்கை கோரப்படுவதாக தெரிவித்தது.