பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தை மையப்படுத்தி பிபிசி செய்தி நிறுவனம் ஒரு ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் தவறான முறையில் இருப்பதாக கூறி மத்திய அரசு அந்த ஆவண படத்துக்கு தடை விதித்த நிலையில் டெல்லி உள்ளிட்ட பல பல்கலைக்கழக மாணவர்கள் ஆவணப்படத்தை திரையிட்டு வருவதோடு, ஆவண படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு பிபிசி ஆவணப்படத்துக்கு விதித்த தடை உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிலர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பிபிசி ஆவண படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கூறிய வழக்குக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் ஆவண படத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கான அசல் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.