ஆன்லைன் வாயிலாக ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை புதுப்பிப்பது பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். ஆதார் பயனர்களின் டேட்டாக்களை பாதுகாக்க ஆதார் அட்டைகளில் ஆன்லைனில் மொபைல் எண்களை அப்டேட் செய்வதை UIDAI ரத்து செய்திருக்கிறது. அதற்கு பதில் ஆதார் மையத்திற்கு நேரடியாக சென்று உங்கள் மொபைல் எண் குறித்த அப்டேட்களை செய்து கொள்வதே இப்போது இருக்கும் ஒரே வழி. எனினும் ஆதார் மையத்தில் நீங்கள் செலவிடும் நேரத்தை குறைக்க மொபைல் எண்ணை மாற்ற (அ) புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை நீங்களே டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.

இருப்பினும் ஆன்லைனில் உங்களது முகவரி போன்ற பல விவரங்களை புதுப்பிக்க, மாற்றும் விருப்பம் நடைமுறையில் இருக்கிறது. அதன்படி https://ssup.uidai.gov.in என்ற இணையத்தள பக்கத்திற்கு சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள “Update Aadhaar option”-ல் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும். புதுபிப்பிற்காக உங்கள் புது முகவரி ஆதாரத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை அப்லோட் செய்ய வேண்டும். புதுப்பிப்புக்கு தேவையான முகவரி ஆதாரம் இல்லாத பயனர்க்ள, Update Address via Secret Code என்ற விருப்பத்தை பயன்படுத்தலாம். இதற்கு உங்களது புது முகவரிக்கு முகவரி ஆதாரம் மற்றும் “verifier-ன்” ஆதார் விபரங்கள் தேவைப்படும்.