அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் சாதனையாளர்கள் பலரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி மக்களை கவர்ந்துள்ளது. அதன்படி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை பாஜகவில் இணைந்து தற்போது மாநில தலைவர் பதவி வகித்து வருகின்றார்.

இவர் கடந்து வந்த பாதை மற்றும் அரசியல் பயணம் குறித்து இந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைய உள்ளது. இந்த திரைப்படத்தில் அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடிக்க உள்ளதாகவும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் இதனை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.