தஞ்சையில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் நடந்த தமிழ் சேவா சங்கம் சார்பில் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழக ஆளுநர் ரவியை தஞ்சை மாவட்ட ஆட்சியர் வரவேற்றார். பின்னர் அங்குள்ள காமாட்சி அம்பிகா கோவிலில் தரிசனம் செய்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் அரை மணி நேரம் தனது கருத்தை தொடர்ந்தார். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கோயில் என்பது நமது கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ளது. நம் ஊருக்கு வரும்போது முதலில் கோவிலை தான் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதில் குறிப்பாக அவர் பேசும்போது,  இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது தமிழகத்தில் தான். மேலும் அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறப்பது, மேலும் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகளை கழிப்பது போன்ற தீண்டாமை கொடுமைகள்,  சாதிய பாகுபாடுகள் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது என ஆர்.என் ரவி குற்றசாட்டை முன்வைத்தார்.