சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக UGC- NET தேர்வு வருகின்ற ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு வருகின்ற ஜூன் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான UGC- NET தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால் NET தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது