கேரளாவில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொற்று கோழிகள், மற்ற பறவைகளின் கழிவுகளில் இருந்தும் மனிதர்களுக்கு எளிதில் பரவும். காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். எனவே தனிநபர் சுகாதாரம் பேணுதல், கை கழுவுதல், முக கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கையாள வேண்டும்.