உத்தரப்பிரதேச மாநிலம் பான்டா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது மோகினி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதுவே அவருக்கு எமனாக மாறியுள்ளது.

மோகினி தனது வீட்டில் ஒரு தற்கொலை காட்சியை ரீல்ஸாக எடுக்க முடிவு செய்தார். இதற்காகத் தனது கழுத்தில் சுருக்கு மாட்டிக்கொண்டு, ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று மொபைலில் வீடியோவை ஆன் செய்துள்ளார்.

எதிர்பாராத விதமாக ஸ்டூல் சரிந்ததோ அல்லது அவர் தடுமாறியோ தெரியவில்லை, விளையாட்டுக்காகச் செய்த அந்தத் தூக்குக் கயிறு நிஜமாகவே அவர் கழுத்தை இறுக்கியது. சில நொடிகளிலேயே அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இந்த கோரச் சம்பவத்தை நேரில் பார்த்த மோகினியின் 4 வயது மகள், அலறித் துடித்தபடி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். ஓடி வந்து பார்த்த அண்டை வீட்டார் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.