கேரளாவில் நடந்த இந்த நெஞ்சை உலுக்கும் விபத்து வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர், எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அவர் விழுந்த அதே நொடியில், எதிரே ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. பைக் சறுக்கிக் கொண்டே சென்று அந்தப் பேருந்தின் முன் சக்கரத்திற்கு மிக அருகில் நின்றது.

ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்த இளைஞர் பேருந்து சக்கரத்தில் நசுங்கியிருப்பார். ஆனால், பேருந்து ஓட்டுநர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு ‘சடன் பிரேக்’ போட்டார். இதனால் அந்த இளைஞர் ஒரு சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.