டெல்லியில், ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட 16 வயதுச் சௌர்யா பாட்டீல் என்ற 10-ஆம் வகுப்பு மாணவரின் வழக்கில், பள்ளி நிர்வாகத்தின் மீது பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சௌர்யா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பள்ளி முதல்வர் அபராஜிதா பால் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உட்பட நால்வரைச் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தற்கொலைக் கடிதத்தில், முதல்வர் அபராஜிதா பால், ஆசிரியர்கள் யுக்தி மாஜன், மனு காலரா, மற்றும் ஜூலி வர்கீஸ் ஆகியோர் தன்னை ‘சித்திரவதை’ செய்ததாக சௌர்யா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மாணவனின் தந்தை பிரதீப் பாட்டீல் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளார். மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளியின் முன் திரண்டு போராட்டம் நடத்தியதையடுத்து, டெல்லி அரசு இந்தச் சம்பவம் குறித்து 3 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க ஒரு 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
