செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இன்று இந்த நாட்டிலே பெண்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகளை பற்றி…  மணிப்பூரில்  நடந்து கொண்டிருக்க கூடிய பிரச்சனையில் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அரசு அக்கறை காட்டாமல்.. இன்று வரை அமைதியாக  இருக்கும் நிலை.

மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்க கூடிய ஒரு சூழல்…   பெண்களுக்கு வேலைவாய்ப்புகளே இல்லாத ஒரு சூழ்நிலை…  பெண்களுக்கான வேலைவாய்ப்பு அப்படிங்குறது இன்னும் மிகப்பெரிய கேள்வி குறியாக மாறிக் கொண்டிருக்கக்கூடிய சூழல்…

பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு நிலை…  வாக்காளர்களிலே சரிபாதியாக இருக்கக்கூடிய….  பாதி அளவு பெண்களாக தான் இந்த நாட்டில் இருக்கிறார்கள்….  மகளிர் மசோதா என்ற கண்துடைப்பை ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்து இருக்கிறது. பிஜேபி கொண்டு வந்து இருக்கிறது, இதை பற்றி விவாதிக்க வேண்டும்.

2024இல் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான வெற்றி வாய்ப்புகள் தான் மிக சிறப்பாக இருப்பதாக நான் கருதுகிறேன் .மக்கள் வந்து இன்னும் ஏமாற தயாராக இல்லை. இத்தனை ஆண்டுகள் தந்து இருக்கக்கூடிய வாக்குறுதிகளை எதையுமே நிறைவேற்றாத ஒரு சூழ்நிலை…  மதத்தை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க கூடிய நிலை… 

எல்லாம் மக்கள் ஒதுக்க தொடங்கி விட்டார்கள். இப்பதான் தேர்தல் அறிவிப்புகள் வந்திருக்கு. முதல்ல ஒவ்வொரு கட்சியும்  வேட்பாளர்கள்,  அவர்களுடைய  கூட்டணி இதையெல்லாம் முடிவு செய்ய வேண்டிய ஒரு அவசியம் இருக்கிறது.  யாரு அழைக்கப்படுகிறார்கள் ? என்பது  அப்புறம் வர வேண்டியது விஷயம் என தெரிவித்தார்.