
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், காவிரி டெல்டா மாவட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் நிலங்கள் கூட பயிர்கள் மூழ்கி விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டு சாகும் நிலை உருவாகி இருக்கிறது என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு நிலத்திற்கு ஏற்றார் போல், உரிய நிதியை வழங்க வேண்டும் என்பதை இந்த நேரத்திலே அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளுக்காக நாங்கள் அதிகமாக நாட்டம் செலுத்துகிறோம் என்று சொல்கிறார்கள் தவிர, குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் அதிகமாக வாழ்கின்ற விவசாய பெருங்குடி விவசாய மக்கள், ஏழ்மை நிலைக்கும் கீழ் தள்ளி….. எழுந்து நடக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதை, அவர்களை கண்காணித்து… அவர்களுக்கு வேண்டிய நிதியை அரசு உடனடியாக நிவாரணமாக கொடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழக அரசை வேண்டுகிறது.
நவம்பர் 30ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் என்னுடைய பிறந்த தின விழா கொண்டாடுகின்ற வேளையில்… நாங்கள் மக்களுக்காக நன்மை செய்கின்ற வகையில்…. ஒவ்வொரு மண்டலமாக மண்டல கூட்டங்களை அறிவித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தல் பணிகளை குறித்து விவாதம் செய்து அதற்கான வேலைகளை துவங்க இருக்கின்றோம் நவம்பர் 30ஆம் தேதி என்பது இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். அது போன்று மக்கள் நலனுக்காகவும், பொதுமக்கள் பிரச்சனைக்காகவும், ஜாதி மத பேதம் இன்றி… இணக்கமாக வாழ அனைத்து மக்களையும் நான் அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.