திருமண விழாக்களில் நகை மற்றும் பணத்தை குறிவைத்து திருடும் கும்பல்கள் புதுப்புது டெக்னிக்குகளை கையாண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒரு திருமண விழாவில் மணப்பெண்ணின் தங்கையை குறிவைத்த சிறுவன் ஒருவன், அவர் மீது ‘நமைச்சல்’ தரும் ஒரு வகை ஸ்ப்ரேவை (Itching Spray) அடித்துள்ளான்.

இதனால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு அவர் நிலைகுலைந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தச் சிறுவன், அவரிடம் இருந்த நகைகள் மற்றும் ரொக்கப் பணம் அடங்கிய பையை மின்னல் வேகத்தில் அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

இந்த அதிர்ச்சி தரும் திருட்டுச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. “குழந்தைதானே” என்று யாரும் சந்தேகப்படாததை சாதகமாக்கிக் கொண்டு, அந்தச் சிறுவன் மிகத் துல்லியமாக இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளான்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, விசேஷங்களுக்குச் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் போலீசாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.