திருமண விழாக்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது வழக்கம் தான், ஆனால் மணமகனின் பாட்டி செய்த காரியம் இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்கள் மேடையில் நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு அருகில் இருந்த மணமகனின் பாட்டி திடீரென ‘ஸ்பார்க்கிள் கன்’ (Sparkle Gun) எனப்படும் தீப்பொறி பறக்கும் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார்.
View this post on Instagram
எதிர்பாராத விதமாக அந்த துப்பாக்கியில் இருந்து தீப்பொறிகள் மேடையை சுற்றியிருந்தவர்கள் மீது பயங்கரமாகப் பாய்ந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
“இது வேடிக்கையான விஷயம் அல்ல, மிகவும் ஆபத்தானது” எனப் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு சின்ன கவனக்குறைவு பெரிய விபத்தில் முடிந்திருக்கும் என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
