உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத்தில் (Moradabad, UP) கடந்த நவம்பர் 25-ஆம் தேதி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) ஏ.டி.எம். இயந்திரத்தை அப்படியே பெயர்த்தெடுத்துச் சென்றச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் கொள்ளையர்கள் புர்கா அணிந்து வந்து, இயந்திரத்தை ஒரு கயிற்றால் காரில் கட்டி இழுத்துச் சென்றுள்ள காட்சி சிசிடிவி-யில் பதிவாகி இணையத்தில் வைரலானது.
சுமார் ரூ. 7 லட்சம் ரொக்கம் இருந்த அந்த ஏ.டி.எம்.மைத் திருடிய கும்பல், பணத்தை எடுத்துவிட்டு, இயந்திரத்தை அமரோஹா (Amroha) பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் வீசிச் சென்றுள்ளது.
यूपी –
मुरादाबाद में 24 नवंबर को PNB की ATM मशीन उखाड़कर ले जाने वाले 5 बदमाश गिरफ्तार।
बुर्का पहने चोरों ने रस्सी का एक छोर ATM और दूसरा छोर गाड़ी से बांधा। गाड़ी स्टार्ट करके झटका मारकर सिर्फ 2 मिनट में ATM उखाड़ कर फुर्र हो गए ।अब्दुल मतीन, तंजीम, हिफजुर रहमान, जुबैर खान,… pic.twitter.com/wzUAWmdpBw
— TANVIR RANGREZ (@virjust18) December 9, 2025
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, போலீஸார் சுமார் 1,000 சிசிடிவி கேமராக்களின்ப் பதிவுகளை ஆய்வு செய்து, இந்தக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றனர். ஹரியானாவின் மேவாட்டைச் (Mewat, Haryana) சேர்ந்த நியாமாத் @ கோடா (Niyamat @ Ghoda) என்பவரே இந்தக் கும்பலின் தலைமை மூளை என்றுத் தெரிய வந்துள்ளது.
போலீஸாருடன் நடந்த என்கவுண்டரில் அப்துல் மதீன், தன்ஜீம் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதில், இருவர் காலில் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்டக் கார் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
