உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா (Amroha, UP) மாவட்டத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த 26 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளங் குழந்தை ஒன்று, அவர்கள் தூக்கத்தில் நிலை மாறியதால், அவர்களுக்கு இடையில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது.

கடந்த நவம்பர் 10-ஆம் தேதி பிறந்த சூஃபியன் (Sufian) என்ற அந்தக் குழந்தையை, பெற்றோர் சதாம் அப்பாஸி (25) மற்றும் அவரது மனைவி அஸ்மா இருவரும் நடுவில் வைத்துப் படுத்திருந்தபோது, உறக்கத்தில் இருவரும்ப் பக்கவாட்டில் திரும்பியதில் குழந்தை அவர்களுக்கு இடையில் சிக்கியுள்ளது.

அடுத்த நாள் காலையில் குழந்தைக்குப் பால் கொடுக்க எழுந்த தாயார், குழந்தை எந்த அசைவும் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

குழந்தைப் பிறந்ததிலிருந்தே பலவீனமாகவும், மூச்சு விடுவதில் சிரமத்துடனும் இருந்துள்ளது. மருத்துவமனை மருத்துவர்கள், குழந்தை மூச்சுத் திணறலால் (Suffocation) உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குழந்தையைத் தனியாக உறங்க வைக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தக் குறித்து எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.