செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் ஆணையக்கிணங்க…  தாம்பரம் மாநகராட்சியினுடைய அவலங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மிகச் சிறப்பாக கண்டனத்தை தெரிவித்து இருக்கிறோம். தாம்பரம் மாநகராட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பது நீங்கள் உங்கள் தொலைக்காட்சியில் எல்லாம் ஏற்கனவே ஒளிபரப்பு இருக்கிறீர்கள்.

தாம்பரம் மாநகராட்சியை பொருத்தவரை அவசர அவசரமாக  அவசரமாக அறிவிக்கப்பட்ட ஒன்று. தரம் உயர்த்தாமல் ரொம்ப அவசர அவசரமாக மாநகராட்சியை அறிவித்தார்கள்.  மேயரை அமர்த்துவதில் தான் குறியாக இருந்தார்களே தவிர,  தாம்பரம் மாநகராட்சியை சரியான முறையிலே மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்து,  கலைந்து அதை நல்ல முறையிலே தாம்பரம் மாநகராட்சி அமைய வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை.

ஒரு சிம்பிளான ஒரு விஷயம் என்னவென்றால் ? தாம்பரம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்கார்ந்து மேயரை பார்த்து பேசுவதற்கு கூட அங்கு இடமே கிடையாது. மொத்தம் 39 பேர் மட்டும் தான் நகராட்சி  இருக்கும்போது உட்கார்ந்து பேசியிருந்த இடம். இன்னைக்கு 70 ஆக விரிவு படுத்தப்பட்ட பிறகு,  அவங்க உட்காருவதற்கு கூட இடம் கிடையாது.  70 உறுப்பினர்கள் உட்கார்ந்து மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு எங்க இருக்கு இடம் ? அப்பதான பிரச்சனைகளை சொல்ல முடியும்.

தாம்பரம் மாநகராட்சியில் மழை பெய்சா உங்களுக்கு தெரியும்….  ஒரு 15, 20 நாளுக்கு முன்னாடி நல்ல சரியான மழை. பெருங்குளத்தூரில் இருந்து பல்லாவரம் வரை கிட்டத்தட்ட ரெண்டு,  மூணு மணி நேரம் டிராபிக் ஜாம். உங்களுக்கு தெரியும் ஏன்னா…. எல்லாம் தண்ணி… மெயின் ரோட்டில்… ஜிஎஸ்டி ரோட்டுல தேங்கிச்சு… மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு ஜிஎஸ்டி ரோட்டிலேயே தண்ணீரை அகற்ற முடியலை.  மாநகராட்சி பகுதிகளுக்கு  எங்க பாத்தாலும் குளம், குட்டையா தண்ணி தேங்கி தேங்கி நிக்குது என தெரிவித்தார்.