செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்த்தில் சபாநாயகர் முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம். நம்பிக்கை தான் முக்கியம். மரபை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம்.  மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அமர்ந்து இருப்பது புனிதமான இருக்கை.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நடுநிலைமையோடு இருக்கனும். ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் நடுநிலைமையோடு இருக்க வேண்டும் என்பவர்தான் சட்டபேரவை தலைவர். அவர் நடப்பார் என்று எண்ணுகிறோம். இதற்கு மேலயும் நடக்கவில்லை என்றால் ? அந்த மரபு மீறுகிறார் என்று  மக்களுடைய பார்வைக்கு படுவார்கள் என தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு  இருக்கை ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி,  இது தவறானது… நான் என்ன சொல்லுறேன். எதிர்க்கட்சி தலைவர்,  துணைத்தலைவர் ரெண்டுக்கும் முன்னாடி இருக்கை ஒதுக்கணும்.  மற்றவர்கள் எல்லாம் உறுப்பினர் தான். ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் எதிர்க்கட்சி தலைவரோ, துணை தலைவரோ அல்ல.. புரியுதுங்களா..? எதிர்க்கட்சி தலைவரோ, துணை தலைவரோ அல்ல. அதுவும்கூட மாண்புமிகு அம்மா அவர்கள், அவர் வந்து செல்வதற்கு வசதியாக ஓரமாக இடம் கொடுத்தார்…

அவர்  சக்கர நாற்காலியில் வந்து செல்ல கூடிய வாய்ப்பை உருவாக்கி தந்தார். அவர் ஓரமாக வந்து, அவை நடவடிக்கையில் கலந்து கொண்டு தடையில்லாமல் செல்ல வேண்டுமென்ற  நல்ல எண்ணத்தில் செஞ்சாங்க. அதை வேண்டும் என்றே இவர்கள் தன்னுடைய இஷ்டத்திற்கு, மாற்றி பேசுகிறது தான் ஒரு வேதனையாக இருக்கிறது என தெரிவித்தார்.