திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய பிரின்ஸ் கஜேந்திர பாபு,  உலகத்தில் எந்த நாட்டிலாவது  இடைநிலை பட்டப்படிப்பினுடைய கடைசி தேர்வையும், முதுநிலை படிப்பிற்கான நுழைவு தேர்வையும் சேர்த்து நடத்தி பார்த்திருக்கிறீர்களா ? MBBSல இருக்கின்ற இறுதி ஆண்டையும்,  PGஇல் இருக்கின்ற முதலாமாண்டுக்கான நுழைவு தேர்வையும்    சேர்த்து நடத்தி பார்த்துறிக்கீங்களா?

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தயாநிதி அவர்கள் சொன்னார்கள். MD முடிப்பதற்கு 10 வருடம் ஆகும் என்று… MD முடிக்க 10 பத்து வருடம் ஆகும் என்றால் என்ன அர்த்தம் ? MBBS முடித்துவிட்டு,  எப்ப வேண்டுமோ அப்ப படிக்குறேன்னு அர்த்தம்.. அதுவரை நான் கிளினிக் பயிற்சி பண்ணுவேன்னு அர்த்தம். MBBS  முடித்தவன் அத்தனை பேரும் MS படிக்கணும்னு உலகத்தில் எந்த சட்டம்  சொல்லுகிறது ?

அப்போ இளநிலை பட்டப்படிப்பிற்கான இறுதி தேர்வையும்,  முதுநிலை  பட்டத்திற்கான நுழைவு தேர்வையும் சேர்த்து நடத்த வேண்டிய அவசியம் எங்கே இருந்து வருகிறது ? ஒரு பல்கலைக்கழகம் முதல் தேர்வை நடத்தும், இரண்டாம் தேர்வு நடத்தும், மூன்றாவது தேர்வு நடத்தும், நான்காவது தேர்வை நடத்தும். ஆனால் 5ஆவது தேர்வை மட்டும் பல்கலைக்கழகம் நடத்தாது,  யாரோ ஒருவர்  நடத்துவார்.

அப்ப எப்படி செனட் கையெழுத்து போடும் என்று தெரியவில்லை? சிண்டிகேட் எப்படி கையெழுத்து போடும் என்று தெரியவில்லை ?  துணை வேந்தர் கையெழுத்து போட வேண்டும் ? நான் யுனிவர்சிட்டி….  நான் board of study, செனட் என எல்லாரும்  கையெழுத்து போட்டு தான் டிகிரி. ஆனால் தேர்வு நான் நடத்த மாட்டேன்.

யாரோ தேர்வு நடத்தி எனக்கு விடைத்தாளில்   மார்க் போட்டுக் கொடுத்தார்கள் என்றால்,  அந்த விடைத்தாளை… அந்த மதிப்பெண்ணை  நம்பி நான்,  எம்பிபிஎஸ் டிகிரில கையெழுத்து போடணும் என்றால், முதலில் அந்த டிகிரி செல்லுமா ? டிகிரி செல்லுமா அது நீட் ஆனாலும் சரி,  நெக்ஸ்ட் ஆனாலும் சரி அது தேர்வு அல்ல. அது சூதாட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.