செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர், நத்தம் விஸ்வநாதன், மக்களவை தேர்தலில் மாநில அரசு மற்றும் மாநில கட்சிகள்  பொதுவாக  தனித்தனி தேர்தல் அறிக்கையை வெளியிடுவது வழக்கம் தான்.   மம்தா பனர்ஜீ இருக்காங்க…. அவுங்க  எப்படி பிரைம் மினிஸ்டர் ஆவீங்களா ?  பிரைம் மினிஸ்டரை முன்னிலைப்படுத்துவது அல்ல. மாநில கட்சியில் யாரும் முன்னின்று நடத்தவில்லை. தலைமை யார் என்று என்பதை முன்னிலைப்படுத்தாமல் தான்  தேர்தலை சந்திக்கிறார்கள்.

அந்தந்த மாநிலத்தினுடைய நலனை மையமாக வைத்து…. முன்னிலைப்படுத்தி…… தமிழ்நாட்டின் பிரத்தியேக பிரச்சனைகள்…  அதுதான் எங்களின் தேர்தல் அறிக்கை. அந்த பிரச்சனைகளை நிறைவேற்றுவதற்கு,  நாங்கள் முயற்சி எடுப்போம். அதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். இது தான் எங்களுடைய தேர்தல் அறிக்கை….  மாநிலத்தினுடைய நல்லன் தான்  எங்களுடைய வேட்பாளர் என பேசி முடித்தார். இதை தொடர்ந்து அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது,

மக்கள் நலன் சார்ந்து தான் எங்களுடைய தேர்தல் அறிக்கை. மக்களின் என்னோட்டத்தை பிரதிபலிக்கின்ற வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும். நோ எனிமி, நோ பிரண்ட்ஸ்….  அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், DMK கூட்டணி கட்சிகள் எங்களுடன் வருமா என்று பொறுத்திருந்து பாருங்கள். பத்திரிக்கை துறையினர் தாக்கப்படுவது என்பது இந்த ஆளும் விடியா  அரசில் அன்றாட நடவடிக்கையாக இருக்கு. பத்திரிக்கை துறை தான்   ஜனநாயகத்தின் நாலாவது தூண். அந்த நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரிகை துறைக்கு முழுமையான அளவில் எப்பொழுதுமே மதிக்கக்கூடிய….

எப்பொழுதுமே பத்திரிக்கை துறையை இதயமாக  பூஜிக்க கூடிய அளவிற்கு ஒரு இயக்கம் என்றால்,  அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் தான். ஆனால் திமுகவை பொருத்தவரையில் மிரட்டல், உருட்டல், அடிதடி. இந்த மூணு வருஷத்துல எடுத்து பாருங்க… பத்திரிக்கை நிருபர்கள் எத்தனை பேர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்,  பத்திரிக்கை நிருபர்கள் எத்தனை பேரை ஜெயில் உள்ளே தள்ளி  இருக்காங்க. சமூக  வலைத்தளங்களில் இவர்களுக்கு எதிரான கருத்துக்களை, ஜனநாயக ரீதியில் சொன்னால்  கூட அவர்களை சிறையில் அடைக்கிற,  ஒரு சர்வாதிகார….  இடியமின் அரசு இந்த விடியா  திமுக அரசு என விமர்சனம் செய்தார்.