நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாதக என பல்வேறு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், மக்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்க திமுக அரசு தயாராகி வருகிறது. பிப்ரவரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000-க்கு பதிலாக ரூ.1,500 ஆக வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 1.7 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் இது பற்றி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.