
செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தினுடைய புத்தகங்களில் ஆறாம் வகுப்பு தொடங்கி பதினெட்டாம் வகுப்பு வரை எந்தெந்த விடுதலை போராட்ட வீரர்களுடைய வரலாறுகள் ? எவ்வாறு மாணவர்களுக்கு விளக்கமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது நாங்கள் கொடுத்திருக்கின்ற அந்த அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது
அதாவது ஆறாம் வகுப்பில் மகாத்மா காந்தியை தொடங்கி, அண்ணல் அம்பேத்கர் மற்றும் வட இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களும் உட்பட ஏழாம் வகுப்பு பார்த்தீர்கள் என்றால் ? வ.உ.தம்பரம் பிள்ளை மற்றும் வாஞ்சிநாதன் போன்ற நமது தமிழ்நாட்டிலே விடுதலைப் போராட்ட வீரர்கள். ஏழாம் வகுப்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் அது மாதிரி குயிலி, மருது சகோதரர்கள்,
ஒண்டிவீரன், புலித்தேவன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அப்படின்னு சொல்லி நம்ம தமிழில் மருந்து சகோதரர்கள் எல்லாருடைய வரலாறுகளும் 12 ஆம் வகுப்பு வரை எந்தெந்த வகுப்பில், என்னென்ன பாடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்.
ஆனால் திராவிடம் மாடல் ஆட்சியில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு அணிவகுப்பில் நம் தமிழ்நாடு விடுதலைப் போராட்ட வீரர்கள் அடங்கிய அந்த வாகனங்கள் ஒன்றிய அரசு நடத்திய அந்த ஊர்வலத்தில் புறக்கணிக்கப்பட்டது. அதில் மருது சகோதரர்கள், வ.உ.சிதம்பரம் பிள்ளையினுடைய சிலைகள் , வரலாறுகள் இடம் பெற்றிருந்தது.
ஆனால் அது ஊர்வலத்தில் கலந்து கொள்ள விடாமல் செய்தது ஒன்றிய அரசு. ஆனால் அது திரும்ப அந்த வாகனத்தை தமிழ்நாடு முழுவதும் அனுப்பி, தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் உடைய வரலாற்றை தமிழ்நாடு முழுவதும் தெரிவிக்க வைத்தவர் நமது மாண்புமிகு முதல்வர் தமிழக முதல்வர்.அதே மாதிரி பாட நூல்களில் எப்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறோம்.
இப்படி தமிழ்நாடு விடுதலை போராட்ட வீரர்களுக்கு நம்ம தமிழ்நாடு முதலமைச்சர் செய்கின்ற அந்த பணிகள்… அவர்களை கௌரவிக்கின்ற விதம்… ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் – குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்த மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் அந்த இடத்திற்கே வரவழைத்து கௌரவப்படுத்தப்படுகிறார்கள்.வர முடியாத வீட்டுக்கு போய் அவர்களை சிறப்பி செய்கின்ற அந்த பணிகளிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆளுநர் எப்படி ஒரு ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை சொல்லுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதனால்தானே பாடல் நூல்களில் இருக்கக்கூடிய எல்லாம் விடுதலைப் போராட்ட வீரர்களுடைய வரலாறையும், உங்களுக்கு தொகுத்து இந்த இடத்தில் நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதனால் ஆளுநர் இப்படி சொல்லிக்கிட்டே இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய நல்லதாக தான் தெரிகிறது. அதனால் தான் எங்களுடைய தமிழக முதல்வர் இந்த ஆளுநரே தொடர்ந்து இருக்கட்டும்.
குறிப்பாக 2024 தேர்தல் வரையிலும் இந்த ஆளுநரே தொடர்ந்திருந்தால் நல்லது அப்படின்னு ஒரு கருத்து சொன்னார். எதற்காக சொன்னார் என்றால், ஆளுநர் இப்படி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சொல்ல…. சொல்ல உண்மையை மக்களிடம் கொண்டு செல்வதற்கே எங்களுக்கு ஒரு வாய்ப்பை அவர் ஏற்படுத்தி கொடுத்துகிட்டே இருக்கிறார். அதனால் இந்த ஆளுநரை தொடர்ந்து இருப்பது ரொம்ப நல்லது என தெரிவித்தார்.