
சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எல்லா விமர்சனங்களையும் ஒத்துக்கொள்ளும் அப்படின்னு நான் சொல்லல.. குறை சொல்றவங்க… அவதூறு பரப்பரவங்க …பழி சுமத்துறவங்க எல்லா காலத்திலும் இருக்காங்க. மருந்து கண்டுபிடித்துவிட்டால் நோய்க்கிருமி ஒழிந்திடுமா என்ன ? அது மாதிரி தான் சமூகத்தை பின்னோக்கி இழுத்துகிட்டு இருந்த நோய்க்கிருமிகளை ஒழிக்க உருவான மருந்து தான் நம்முடைய திராவிட இயக்கம். அதனால அந்த நோய்க்கிருமிகளை எதிர்த்து நாம தான் போராடியாக வேண்டும்.
இன்றைக்கு சோசியல் மீடியாவும், சில மீடியாக்களும் அவுங்க கண்ட்ரோல்ல இருக்கு. அதனால பொய் சொல்லவும், அவதூறு பரப்பவும் அவங்க தயங்குறது இல்ல. இதுக்கு சரியான பதிலை நாம சொல்லணும். ராணுவத்தோட முன்கள வீரர்கள் மாதிரி, கழகத்தோட முன் களவீரர்கள் நீங்க. களமும், தளமும் கை வந்தால் தான் வெற்றி. களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளருக்கு தளத்துல களமாடி வெற்றிக்கு காரணமாக இருக்கக்கூடியவங்க தான் நீங்க.
இங்க வந்திருக்கிற உங்க எல்லாருடைய பாலோவர்ஸ் எண்ணிக்கை என்ன தெரியுமா ? 92 லட்சத்து 62 ஆயிரத்து 618. ஏறத்தாழ ஒரு கோடிக்கு பாலோவர்ஸ் வந்திருக்காங்க. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுடைய தன்னார்வத்தால்… தன்னலமற்ற செயல்பாட்டால் கழகத்திற்கு கிடைத்திருக்கிகின்றார்கள்.
தொண்டர்களின் உழைப்பு கழகத்திற்கு ரத்த நாதம்னு கலைஞர் சொல்லுவார். அதனாலதான் தலைமை கழகத்தின் சார்பில் வெளியிடக்கூடிய அறிக்கைகள், நிர்வாகிகள் வெளியிடக்கூடிய அறிக்கைகள், வருவதுக்கு முடியே உங்க கிட்ட இருந்து ரியாக்சன் வந்துருது. நாங்க சொல்ல முடியாத… சொல்ல தயங்குகிறத உங்களால் சொல்ல முடியும்.
அந்த வகையில் நீங்க திமுகவுக்கு மிகப்பெரிய பலம். ஏராளமான அரசியல் எதிரிகளை வெற்றி கண்டது நம்முடைய வரலாறு. கொம்பாதி கொம்பர்கள் எல்லாம் அப்படின்னு சொல்லப்பட்டவங்க….. அவங்களை எல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற்று இருக்கோம். இந்த இயக்கத்தை அழிச்சிடலாம் என்று நினைத்தவுங்களுடைய எண்ணம் தான் அழிச்சிருக்கு என தெரிவித்தார்.