செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, போராட்டம் நடத்தும் விவசாயிகளை தொலைதூரங்களில் உள்ள வேறு வேறு சிறையில் பிரிச்சு அனுப்புவது இது ஒரு பாசிஸ்ட் அரசாங்கத்தினுடைய வேலையாக தான் பார்க்க முடியும். காவல்துறை சொல்கிறது என்றால்,  அரசாங்கத்திற்கு அறிவில்லையா ? அமைச்சர் பெருமக்கள் கேள்வி கேட்க மாட்டார்களா ?  போலீஸ்காரன் என்ன சொல்கிறார் என்றாலும் கேட்டு கையெழுத்து போட்டுவிடுவார்களா ? என்ன நடக்கிறது இங்கு ? போலீஸ்காரர்  ஆட்சியா ?

இல்ல  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா ? யார் ஆட்சி நடக்கிறது ?  போலீஸ்காரர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு சொந்த புத்தி இல்லையா? திமுக அரசுக்கு இல்லையா ?  இப்படியா அனுப்பிவிட்டீர்கள்…..  இங்க இருந்து பாளையங்கோட்டை சிறையில் போடுறீங்க என்ன  சாதிக்கப் போகிறீர்கள் ?என்னையும் இங்கிருந்து வேலூர் சிறையில் அடைத்தீர்கள் ?

என்  குடும்பம் என்னை சந்திக்க விடாமல்  50 நாட்கள் இதே வேலை,   சித்திரவதை பண்ணுனீங்க. தனிமை சிறையில் அடைத்தீர்கள். எங்களை நிறுத்த முடிச்சதா ? 55 வழக்கு போட்டு வச்சி இருக்கீங்க ? நிறுத்த முடிஞ்சுதா ?  இன்னைக்கும் நிற்கின்றோம்… போராட்டத்தில் நிற்போம்.. உங்க  வழக்கு,  சிறை எல்லாம் எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. பயமும்  கிடையாது என தெரிவித்தார்.