தேனி மாவட்டத்தின் அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியில் வசிப்பவர் ஒச்சானத்தேவர் (63). இவர் பழனி முருகன் கோவிலுக்கு வழிபட சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தீடிரென ஆட்டோவில் இருந்த பயணியை, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு நபர் இருவரும் சேர்ந்து  ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர்.

பிறகு அவரிடம் இருந்த 10,850 ரூபாய் பணம் மற்றும் செல்போனை அவரிடம் இருந்து பறித்து, அவரை நடு வழியில் இறக்கிவிட்டனர். அந்த மர்ம நபர்கள் இருவரும் ஆட்டோவில் தப்பித்து சென்றனர். மேலும் இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி  வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின் தப்பிச் சென்ற அவர்கள் இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.