யூ பி எஸ் தேர்வில் செயற்கை நுண்ணறிவான சாட் ஜிபிடி 54 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓபன் ஏஐ என்ற நிறுவனத்தால் சாட் ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதனைப் போல் செயல்படும் இந்த சாட் ஜிபிடி-யின் திறமையை சோதனை செய்ய யூபிஎஸ் தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ் தேர்வானது இந்தியாவில் நடத்தப்படும் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாகும். சிவில் சர்வீஸ் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ் தேர்வின் முதல் நிலை தேர்வில் சாட் ஜிபிடி தோல்வி அடைந்துள்ளதாக அனலிடிக்ஸ் இந்திய இதழ் தெரிவித்துள்ளது. அது யூபிஎஸ் முதல் நிலை தேர்வு 2022 கேள்வித்தாள் ஒன்றிலிருந்து நூறு கேள்விகளுக்கு பதில் அளித்த ஜி பி டி 54 கேள்விகளுக்கு மட்டுமே சரியாக பதிலளித்துள்ளது. இதன் அடிப்படையில் 87.54 கட் ஆப் அடிப்படையில் சாட் ஜிபிடியால் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. தற்போது உலகின் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த சாட் ஜிபிடி குறைந்த கால அளவிலேயே பிரபலமாகிவிட்டது.
உலகில் உள்ள அனைத்து கேள்விகளுக்குமான பதில்களையும் கொண்டுள்ளதாக கூறப்படும் இந்த சாட் ஜிபிடி உலகெங்கிலும் உள்ள மிகவும் கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மாடர்ன் பள்ளியில் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் எம்பிஏ திட்டத்தில் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றது. இதன் பிறகு அமெரிக்காவில் மருத்துவ தேர்வில் வென்று ஜிபிடி தனது திறமையை நிரூபித்தது. இதேபோல் முயற்சிக்கப்பட்ட யுபிஎஸ்சி தேர்வில் சாட் ஜிபிடி தோல்வி அடைந்துள்ளது என்பது மக்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. மேலும் யுபிஎஸ் தேர்வு அவ்வளவு சுலபம் இல்லை என்று இது உணர்த்துகிறது.