அமெரிக்காவில் மூளையை உண்ணும் அமீபாவால் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஒருவர் குழாய் நீரில் அவரின் மூக்கை சுத்தம் செய்துள்ளார். இதை அடுத்து உடல் நல குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென்று உயிரிழந்துள்ளார். இதை அடுத்து மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதனை செய்ததில் அவருக்கு நெக்லேலியா ப்ளோரி என்ற நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மூளையை உண்ணும் அமீபாவால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒற்றை செல் உயிரினமாகும். உலகம் முழுவதும் காணப்பட கூடிய இவை மூக்கின் வழியாக மூளையைச் சென்றடைந்த பின்னர் மூளையில் இருக்கும் திசுக்களை பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பெரும்பாலான நோய் தொற்றுகள் சூடான ஏரிகள் மற்றும் நீர் நிலையங்களிலே காணப்படுகிறது. காரணம் இந்த வகை உயிரினம் வெப்பத்தை விரும்புவதை மட்டும் இன்றி வெப்பநிலையங்களில் தான் சிறப்பாக வளர்கின்றன.

நெக்லேரியா ப்ளோரி நோயின் அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், குமட்டல், சமநிலை இழப்பு, திசை திரும்பல், வலிப்பு தாக்கங்கள் மற்றும் கடினமான கழுத்து ஆகியவை ஆகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 2019, 2020, 2021 மற்றும் 2022 என அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆண்டிற்கு ஒருவர் என்று உயிரிழந்து வரும் நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டில் ஒருவர் உயிரிழந்துள்ளது. மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.