உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலரது வாழ்க்கையே மாறிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வாழ்க்கையை புரட்டி போட்டது. கொரோனா தொற்று ஒரு சிலருக்கு சில நாட்களில் மறைந்துவிடும் நிலையில் சிலர் நீண்ட கோவிட் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் ஹொண்டர்சன் என்ற பெண்மணி நீண்ட கோவிட் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வாசனையை நுகரும் திறனை இழந்த ஜெனிபர் மருத்துவமனையில் நீண்ட சிகிச்சையில் இருந்தார். தற்போது இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவரால் வாசனையை நுகர முடிந்தது. கண்களில் ஆனந்த கண்ணீரோடு காபியை நுகர்ந்து பார்த்து ஜெனிபர் காபி குடிக்கும் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. மேலும் என்னுடைய வாசனை மற்றும் ருசியை இழந்தது என்னை மிகவும் மனச்சோர்வு அடைய வைத்தது. தற்போது காபியை நுகரும் திறனை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கண்ணீரோடு ஜெனிபர் கூறியுள்ளார்.