தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து மன வேதனையில் இருந்த சுபாஷ் திடீரென தனது குழந்தைகளான மாரின்(13) மற்றும் ஆராத்யா(10) ஆகிய இருவரையும் தூக்கில் போட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதனை அறிந்த கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தைகள் மற்றும் சுபாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.