
சென்னை அபிராமபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு இருக்கிறது. தொண்டர்கள் எப்போதும் எந்நாளும் என் பக்கம் தான்.
என்னை கடவுளாக நினைக்கக்கூடிய தொண்டர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் தான் என் சொந்தங்கள். அவர்களை எனக்கு வழிகாட்டிகள். தொண்டர்களின் முன்னேற்றத்திற்கு ஆக நான் எதையும் செய்வேன் என்று கூறினார்.