மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் தேசிய புலனாய்வு முகமை விடுவித்தது. இது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருப்பதாவது மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் தங்கள் மதத்திற்காக குறி வைக்கப்பட்டு தாக்கப்பட்டனர்.
வேண்டுமென்றே மோசமான வழக்கு விசாரணையே விடுதலைக்கு காரணம். குண்டுவெடிப்பு நடந்து 17 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் தற்போது நீதிமன்றம் அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களையும் ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்துள்ளது. இந்த தீர்ப்பு மேல்முறையீடு செய்யப்படுமா?. மகாராஷ்டிராவின் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் இதை வலியுறுத்துமா?. 6 பேரை கொன்றது யார் கடந்த 2016 ஆம் ஆண்டில் வழக்கில் அப்போதைய வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மென்மையாக நடந்து கொள்ளுமாறு NIA தன்னிடம் கேட்டதை நினைவு கூறுங்கள்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் எம்எல்ஏ பிரக்யாவை விடுதலை செய்ய முயற்சித்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதே பிரக்யா கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக எம் பி ஆக மாறினார். மோடி அரசு பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியதை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.
