அமலாக்கத்துறை வழக்கு விசாரணையின் பிடியில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக திமுக அரசாங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. சட்டப் போராட்டங்களை நடத்திவரும் திமுக அரசின் நடவடிக்கையை மத்தியில் ஆட்சியில் இருக்கும் டெல்லி உச்சிநோக்கி வருவதாக பாஜக உள்ளிட்ட பலரும் பேசி வருகிறார்கள். தமிழக அரசின் இந்த செயல்பாடுகளை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக டெல்லியில் இருக்கும் மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா பரபரப்பை கிளப்பும் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், திமுக வின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா? என பதிவிட்டுள்ளார்.