தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதனைத் தொடர்ந்து “ஃப்ரீடம்” திரைப்படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தை கழுகு திரைப்பட இயக்குனர் சத்ய சிவா இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படம் சில நிதி சிக்கலால் கடந்த ஜூலை 11ஆம் தேதி வெளியாக இருந்த படம் வெளியாகவில்லை.
தற்போது ஜூலை 18-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்ற திரைப்படத்தைப் போன்றே இந்தத் திரைப்படத்திலும் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கி தப்பிக்கும் கதைக்களம் கொண்ட படம் என கூறப்பட்டுள்ளது.
