தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். சமீப காலங்களாக உடல் எடை குறைத்து வித்தியாசமான தோற்றத்தை வெளிப்படுத்துவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் இளமையான தோற்றத்தில் சிம்பு முற்றிலும் மாறுபட்டவராக நடிக்க உள்ளார். அதற்காக தனது உடல் எடையை 10 நாட்களில் 10 கிலோ வரை குறைத்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் டீசர் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதாகவும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இருப்பினும் படத்தின் முக்கிய விபரங்களை கதாபாத்திரங்களை குறித்த எந்த ஒரு தகவலையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை.

இருப்பினும் “வடசென்னை” போன்று மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாதபோதும் சிம்பு தனது உடல் எடையை குறைத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.