தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கும் நடிகை ரித்விகா, தனது திருமண வாழ்க்கையை தொடங்கவிருக்கிறார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள தகவலில், தனது வருங்கால கணவர் வினோத் லட்சுமணன் என பெயரையும், நிச்சயதார்த்த நிகழ்வின் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். முகம் தெரியாத வகையில் பகிரப்பட்ட புகைப்படங்களில், இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்கிற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பரதேசி படம் மூலம் அறிமுகமான ரித்விகா, மெட்ராஸ், கபாலி, ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன், 2018ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். நடிப்புக்கே முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் திகழ்ந்து வந்த இவர், தற்போது வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு பாய்ந்துள்ளார்.
ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் திருமண நிச்சயதார்த்த செய்தியை உறுதிப்படுத்தியதையடுத்து, ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலர் வாழ்த்துகள் மற்றும் ஆசிகள் தெரிவித்து வருகின்றனர். விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
