நாகப்பட்டினம் மாவட்டத்தில் , இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென சோகமடைந்தது. இதில் கார் ஸ்டண்ட் காட்சி ஒன்றை படமாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்டண்ட் மாஸ்டரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(வயது 54) என்பவர் உயிரிழந்துள்ளார். வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கின் போது காரில் இருந்து குதித்தபோது, தவறுதலாகக் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலானது படக்குழுவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவித்தனர். அவரது உடல் மேற்பட்ட பரிசோதனைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த மரண சம்பவம் படக்குழுவினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mohan Raj who lost his life due to the accident during a car action sequence in #PaRanjith’s #Vettuvam ft. Arya.
More safety measures needed in Indian cinema for stunt sequences 🙏pic.twitter.com/RdBqoDNYPE
— Rajasekar (@sekartweets) July 14, 2025
“>
இதனையடுத்து, நாகப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர். திரையுலகில் ஒவ்வொரு காட்சிக்கும் உயிரை பணையமாக வைத்து வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பி இருக்கிறது.
