இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி ரிவாபா ஜடேஜாவுடன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியது அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஏற்கனவே பாஜகவில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஜடேஜா, ஜாம்நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் அண்மையில் குஜராத் மாநில அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள தனது மனைவியுடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள ஜடேஜா, “கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு பிரதமர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” எனப் புகழ்ந்துள்ளார்.
ஜடேஜா பாஜகவில் இணைந்த பிறகு நடைபெறும் இந்த முக்கியச் சந்திப்பு, வரும் காலங்களில் அவருக்குக் கட்சியில் பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம் அல்லது குஜராத் அரசியலில் அவர் இன்னும் தீவிரமாகக் களம் இறங்கலாம் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
பிரதமரின் தனிப்பட்ட அன்பையும் அரவணைப்பையும் பெற்ற ‘குஜராத் பையன்’ ஜடேஜாவின் இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
