இந்தியாவில் வசித்து வரும் ஆஸ்திரேலிய இளைஞர் ஆண்டி எவன்ஸ், இந்திய விமானப் பயணிகளின் அசராத தூக்கத்தைக் கண்டு வியந்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் ஒரு விமானப் பயணத்தை மேற்கொண்ட ஆண்டி, விமானம் தரையிறங்கும் போது (Landing) நிலநடுக்கம் ஏற்பட்டது போல பயங்கர அதிர்வுகள் இருந்ததைக் கண்டு பயத்தில் தனது இருக்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Aussie Bhai | Andy Evans (@theaussiebhai)

ஆனால், அவருக்குப் பக்கத்தில் இருந்த ‘நிதின் ஜி’ என்ற பெரியவர் உள்ளிட்ட இந்தியப் பயணிகள் பலரும், அந்த அதிரும் சத்தத்திலும் எந்தக் கவலையும் இல்லாமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது அவருக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

“இந்தியர்களுக்கு எங்கே வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் தூங்கும் அபூர்வ சக்தி இருக்கிறது; எனக்கும் யாராவது இதைச் சொல்லிக் கொடுங்கள்” என அவர் ஜாலியாகப் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த இந்திய நெட்டிசன்கள், “நாங்கள் எல்லாம் இந்திய ரயில்வேயிலேயே பழகியவர்கள், இந்தச் சின்ன அதிர்வுக்கெல்லாம் அசர மாட்டோம்” என்றும், “விமானம் நின்றதும் பார்த்தால் தெரியும், அதே நிதின் ஜி தான் முதலில் எழுந்து பேக் எடுக்க வரிசையில் நிற்பார்” என்றும் கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.