சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலின் கடந்து வந்த பாதை தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை இன்று நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். ரஜினியுடன் சேர்ந்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.

அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை பயணம் மற்றும் அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான். அவர் படிப்படியாக முன்னேறியுள்ளார். அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் முதலமைச்சர் பதவி. அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பிறகு தன்னுடைய கருத்தை எழுத்துப் பூர்வமாகவும் பதிவு செய்தார்.