மி டூ இயக்கம் என்பது உலக அளவில் பணியிடங்களில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்களை twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் வெளி உலகுக்கு அம்பலப்படுத்தும் முறையை நோக்கமாகக் கொண்ட ஒரு இயக்கமாகும். இந்த இயக்கத்தை அமெரிக்க நாட்டின் சமூக ஆர்வலரும் சமூக ஏற்பாட்டாளருமான தாரன புர்கே என்பவர் முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு Mee Too என்ற சொற்றொடர் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை சமூக ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தார். அதன் பிறகு ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ என்பவர் தனக்கு யார் யாரால் பாலியல் துன்புறுத்தல்கள் நேர்ந்தது என்பது குறித்து ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தினார்.

மிலானோ மற்றும் மைக்கேல் பேக்கர் ஆகியோர் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்களை ட்விட்டர் மூலம் தங்களுக்கு யாரால் எவ்வாறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டோம் என்று வெளியிட ஊக்குவித்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடிகரும் இயக்குனருமான நானா படேகரால் பணியிடத்தில் தனக்கு முன்னர் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக மி டூ இயக்கத்தின் உந்துதலால் ட்விட்டரில் வெளியிட்டார்.

இதன் மூலமாக இந்த இயக்கம் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமானது. இந்த இயக்கத்தால் பணியிடங்கள், ஊடகங்கள் மற்றும் அரசியலில் பணியாற்றிய பல பெண்கள் தங்களுக்கு முன்னர் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த twitter மூலமாக பகிர்ந்து கொண்டனர். 0இந்த இயக்கம் மூலமாக பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பதிவிடும் போது சமூக விழிப்புணர்வு ஏற்படுகின்றது. இதனால் ஆண்கள் பெண்களை அச்சுறுத்த அச்சப்படுவார்கள் என்பது தான் உண்மை.